தமிழ்நாடு

டிடிவி முன்னிலைக்கு அந்த வீடியோ காரணமா?

டிடிவி முன்னிலைக்கு அந்த வீடியோ காரணமா?

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  டிடிவி தினகரன் முன்னிலை பெறுவதற்கு ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது எடுக்கப்பட்ட வீடியோதான் காரணம் என்று சிலர் கூறிவருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதா பழச்சாறு குடிக்கும் வீடியோவை வெளியிட்டார். ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே தாக்கப்பட்டார் என்றும் சசிகலா குடும்பத்தினர் அவரை கொன்றுவிட்டனர் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயலலிதாவின் அந்த வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ, டிடிவி தினகரனுக்கு ஆதரவான வாக்குகளை ஆர்.கே.நகர் தொகுதியில் பெற்றுத்தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.