தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று நிர்வாணமாக போராடியது ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் ஈட்டியை பாய்ச்சியது போல் வலி ஏற்படுத்துவதாக அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தினகரன், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சந்தித்து அவர்களது குறைகளை களையவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.