தமிழ்நாடு

குற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்

குற்றாலத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வேறு விடுதிக்கு மாற்றம்

webteam

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நெல்லை குற்றாலத்தில் விடுதியை மாற்றியுள்ளனர். 

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் 10 பேர் குற்றலாத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் எம்.எல்.ஏ பிரபுவும் தங்கியுள்ளார். பழைய குற்றாலத்தில் அமமுக-வைச் சேர்ந்த இசக்கி சுப்பையாவின் விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர். 

பின்னர் தாமிரபரணி நதியில் புனித நீராடிய அவர்கள் யாக பூஜையிலும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பழைய குற்றாலம் விடுதியை காலி செய்தனர். அங்கிருந்து அவர்கள், தற்போது ஐந்தருவியில் உள்ள மற்றொரு விடுதிக்கு மாறியுள்ளனர். அந்த விடுதியும் இசக்கி சுப்பையாவின் மற்றொரு விடுதி என்று கூறப்படுகிறது. முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் சிலர் புஷ்கர விழாவிலும் பங்கேற்றனர்.