தமிழ்நாடு

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்த அருண்குமாரின் கட்சிப் பதவி பறிப்பு

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்த அருண்குமாரின் கட்சிப் பதவி பறிப்பு

webteam

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளித்த அருண்குமார் எம்.எல்.ஏவை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி அதிமுக துணைப் பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவான அருண்குமார், கோவை மாநகர அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தார். அதிமுக தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்த ஓ.பன்னீர்செல்வத்தை கடந்த 13ம் தேதி நேரில் சந்தித்து அருண்குமார் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில், கட்சி விதிகளை மீறியதால் அருண்குமார் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.