தமிழ்நாடு

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு - தேர்தலுக்கான கண்துடைப்பு அறிவிப்பா? டிடிவி.தினகரன் கேள்வி

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு - தேர்தலுக்கான கண்துடைப்பு அறிவிப்பா? டிடிவி.தினகரன் கேள்வி

Veeramani

அவசரகதியில் வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக வெளியிடப்பட்ட கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள  ட்வீட்டில் “எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது.

109 சமூகங்களை உள்ளடக்கிய MBC பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். எதற்காக இந்த அவசர கோலம்? வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது?பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு 6மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காக தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது. (1/3)</p>&mdash; TTV Dhinakaran (@TTVDhinakaran) <a href="https://twitter.com/TTVDhinakaran/status/1365555216007921667?ref_src=twsrc%5Etfw">February 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>