தமிழ்நாடு

ஒன்றாக இணைந்தால் கிளம்பிவிடுகிறேன்: டிடிவி தினகரன்

ஒன்றாக இணைந்தால் கிளம்பிவிடுகிறேன்: டிடிவி தினகரன்

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் அதனை வரவேற்கத் தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சைக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், அதிமுக-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தால் வரவேற்கிறேன். இங்குள்ள 123 பேரும் அங்குள்ள 13 பேரும் ஒன்றாக சேர்ந்து நாங்கள் ஆட்சியை பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள் என சொன்னால், உடனே bye சொல்லிவிட்டு கிளம்பி விடுகிற பற்றற்ற நிலையில் தான் இருக்கிறேன் என டிடிவி தினகரன் கூறினார்.