தேர்தல் தோல்வி பயத்தால் முன்னுக்கு பின்னாக பேசி ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்வதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி.தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியவர் ஆர்.கே.நகரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது இலக்கு என தெரிவித்தார். ஆர்.கே.நகரில் மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யவே அமைச்சர்கள் பரப்புரை செய்து வருவதாகவும். தேர்தல் தோல்வி பயத்தால் முன்னுக்கு பின்னாக பேசி ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்வதாக தினகரன் குற்றம்சாட்டினார்.பணம் கொடுக்கிறோமா இல்லையா என்று ஆர்.கே.நகர் மக்களுக்கு தெரியும் என கூறினார். கொடுங்கையூர் குப்பைக்கிடங்கை தூய்மைபடுத்தி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.