தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் யூ- டியூப் பிரபலம் டி.டி.எஃப் வாசன் தற்போது மலைப்பாம்பை கையில் பிடித்தபடி வீடியோ வெளியிட்ட விவகாரத்திலும் சிக்கியுள்ளார்.
தனது செல்லப் பிராணியாக மலைப்பாம்பை வாங்கியுள்ள டிடிஎஃப் வாசன், அதனுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், ``சாதாரண பாம்பு வகைகள், மலைப்பாம்பு வகைகள் என எந்த வகையான பாம்புகளும் இந்தியாவில் வளர்க்க அனுமதி இல்லை” என வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.