தமிழ்நாடு

ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முயற்சி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

webteam

விண்ணில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றித் திரியும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை தொடர்பு கொள்ள தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ஐ.என்.எஸ் கடற்படை மையத்தில் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சிவன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையம் அமையும் போது அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார். கிராம மக்களுக்கும் அதிவேக இணையதள வசதி கிடைக்கும் வகையில் Gslv Mark 3 ராக்கெட் மூலம் ஜி சாட் 29 செயற்கைக்கோள் அடுத்ததாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்தாண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படவுள்ளதாகவும், அதற்காக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். அதிநவீன தொலை தொடர்பு சேவைக்காக மார்ச் 29 ம் தேதி ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜி சாட் 6A  செயற்கைக்கோளை தொடர்புகொள்ளும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.