உயிரிழந்தவர்களின் பெயர்களில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயன்றதாக, சென்னை கீழ்ப்பாகத்தில் மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா சிகிச்சையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அம்மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க, சில மையங்களை மட்டுமே திறந்துள்ள தமிழக அரசு, மருந்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ரெம்டெசிவிரை விற்பனை செய்து வருகிறது.
அதனால், அந்த மருந்தை வாங்க மக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மருந்து வாங்க வந்ததாக மூன்று பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்தது போலி ஆவணங்கள் என சந்தேகம் எழுந்ததால், காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.