தமிழ்நாடு

ரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயற்சி; உயர் மின் அழுத்த கம்பி உரசி விபத்து

ரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயற்சி; உயர் மின் அழுத்த கம்பி உரசி விபத்து

webteam

சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞருக்கு மின்சாரம் தாக்கியதில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தாம்பரம் ரயில்வே ஊழியர் மாரியப்பனின் மகன் திலீபன் மது அருந்திவிட்டு தனது நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்போது பராமரிப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி மீது ஏறி, ‌விநோதமாக செல்ஃபி எடுக்க முயன்ற போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசி தூக்கி எறியப்பட்டார். படுகாயம் அடைந்த திலீபன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.