தமிழ்நாடு

8 நாட்களே ஆன குழந்தையை கடத்த முயற்சி... மூவரிடம் விசாரணை..!

8 நாட்களே ஆன குழந்தையை கடத்த முயற்சி... மூவரிடம் விசாரணை..!

Rasus

நெல்லையில், பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை விதிமுறைகளை மீறி ராஜஸ்தானுக்கு கொண்டுசெல்ல முயன்ற பாதிரியார் உள்ளிட்ட மூவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லையில் 16 வயது பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை சட்டத்திற்குப் புறம்பாக ராஜஸ்தான் கொண்டுசெல்ல முயற்சி நடைபெற்றுள்ளது. பிறந்த 8 நாட்களே ஆன அக்குழந்தையை ராஜஸ்தானுக்கு கொண்டு செல்ல முயற்சித்த, ராஜஸ்தானைச் சேர்ந்த பாதிரியார் வல்ராம், அவரது மனைவி கிறிஸ்டியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்கு உதவியதாக பீகாரைச் சேர்ந்த டிரைவர் இம்மானுவேலிடமும் விசாரணை நடைபெறுகிறது.

குழந்தையை வாங்கி விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 16 வயது பெண்ணிடம் வாங்கப்பட்ட குழந்தையை, தென்காசி மருத்துவமனையில் சேர்த்தபோது பாதிரியார் தரப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளது.