தமிழ்நாடு

திருச்சி: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் பணி தொடக்கம்

திருச்சி: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் பணி தொடக்கம்

kaleelrahman

திருச்சியில் ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் பணி இன்று முதல் நடைபெறுகிறது.

திருச்சியில் விதிகளை மீறியதாக காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 6,566 இருசக்கர வாகனங்களும், 193 மூன்று சக்கர வாகனங்களும், 73 நான்கு சக்கர வாகனங்களும் அதன் உரிமையாளர்களிடம் இன்று முதல் தினசரி 250 வாகனங்கள் வீதம் திருப்பி வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறிய பொதுமக்கள் மீது 13,239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 லட்சத்து 85 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.