போலி மருத்துவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி அளித்த தகவலில், திருச்சியில் போலி மருத்துவர்களை கண்டறியக் குழு அமைக்கப்படவுள்ளதாகவும், போலி மருத்துவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். முன்னதாக திருச்சியில் மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் எதிரே போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.