தமிழ்நாடு

மனைவியை பார்க்க அனுமதி மறுப்பு -மரத்தில் ஏறி சிறை கைதி போராட்டம்

kaleelrahman

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் மரத்தில் ஏறி கைதி போராட்டம் - கதவை திறக்குமாறு கதவை தட்டி சக கைதிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த 120 பேர், பிற நாடுகளைச் சேர்ந்த 40 பேர் என மொத்தம் 160 கைதிகள் உள்ளனர். இந்நிலையில், இலங்கை கைதி ராஜன் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய மனைவி அனு அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால், அவருடைய ஆதார் அட்டையில் தந்தை பெயர் மட்டுமே உள்ளதாகவும், கணவர் பெயர் இல்லாததால் பார்க்க அனுமதி வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாகவும், மேலும் கேட்டின் முன் நின்ற தன்னை காவலர்கள் இழிவாக பேசியதாகவும் ராஜனின் மனைவி அனு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன் மனைவியை தரக்குறைவாக பேசியதால் ராஜன் அங்குள்ள மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். வாசல் கதவுகளை தட்டி கதவை திறக்குமாறு சக கைதிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது