தமிழ்நாடு

பொன்மலை ரயில்வேயில் தமிழர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கக்கோரி நாம்தமிழர்கட்சி போராட்டம்

Veeramani

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு பணியில் முன்னுரிமை வழங்கக்கோரி நாம்தமிழர்கட்சி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் “ திருச்சி பொன்மலை ரயில்வே கோட்டத்தில் அப்ரன்டீஸ் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வழங்கமால், தற்போது 582  பணியிடங்களில் 12 இடங்கள் மட்டும் தமிழர்களுக்கு வழங்கிவிட்டு மீதமுள்ள இடங்களை வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கியுள்ளனர். அதனால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீத இடங்களை தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

பொன்மலை ரயில்வே பணிமனையில் வடமாநிலத்தவர்கள் மற்றும் பிறமாநிலத்தவர்களுக்கு வழங்கிய பணி ஆணைகளை ரத்துசெய்து, இந்த கோட்டத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து பணிக்காக காத்திருக்கும் 5000 பேருக்கு பணியில் முன்னுரிமை வழங்கவேண்டும்” என்று கூறினார்கள். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.