inba's track
inba's track pt web
தமிழ்நாடு

ஆபாசமாக, பெண்களை சித்தரித்து Mono-Acting... Inba's track இன்பா மீது பாய்ந்தது சைபர் கிரைம் வழக்கு!

Angeshwar G

சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றி பிரபலம் அடைபவர்களில் சிலர் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சார்ந்த வண்ணம் வீடியோக்களை பதிவேற்றுவார்கள். சிலர் சமையல் வீடியோக்கள், நடன வீடியோக்கள் என பதிவேற்றம் செய்வர். இன்னும் சிலர் திறமைகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு வீடியோக்களை பதிவேற்றுவர்.

ஆனால், இன்னும் சிலர் பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி குற்றச்செயல்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகிறது.

inba's track

அப்படியான ஒரு இன்ஸ்டா பிரபலம்(!)தான் இன்பாஸ் ட்ராக்-ல் வரும் இன்பா. அக்காரணத்துக்காகவே அவர்மீது திருச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக திருச்சி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் விஜய், வயது 26. இவர் இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது, இன்று 04.12.23-ஆம் தேதி சமுகவலைதளமான YouTube மற்றும் Instagram -வை பார்த்துக் கொண்டு இருந்த போது inba's track என்ற பெயரில் @inba's track - என்ற id -யை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது, வீடியோக்கள் அனைத்தும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. இவ்வீடியோக்களை பார்க்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம் மீண்டும் வீடியோக்களை பார்க்க தூண்டி, பாலுணர்வுகளை தூண்டும் வகையிலும், கணவன், மனைவி உறவு முறை பற்றி ஆபாசமாகவும், மேலும் முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும், பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

inbas track

இதன்மூலம் Instagram -ல் 82,000- க்கும் மேற்பட்ட Followers மற்றும் YouTube- 1,93,000 subscribers பெற்று உள்ளதால், இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள்; மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும், இதனால் இளைஞர் சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இன்பாஸ் ட்ராக்ஸ் இன்பா மீது வழக்கு

இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண், 32/23, U/s 292(a), 294(b), 509 IPC & 67, 67-A, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.) மேற்படி சமூக வலைதளத்தை பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த இளைஞர் இன்பா மீது ட்விட்டர் மூலமும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் குற்றச்சாட்டுக்கு ரிப்ளை செய்திருந்த வருண்குமார் ஐ.பி.எஸ் இன்பாவின் விவரங்களை கேட்டிருந்தார். அதற்கு சமூகவலைதளவாசிகள் ரிப்ளையும் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது திருச்சி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.