தமிழ்நாடு

தனியார் விடுதியில் வெங்காய வெடி வீச்சு

தனியார் விடுதியில் வெங்காய வெடி வீச்சு

webteam

திருச்சியில் தனியார் விடுதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் வெங்காய வெடியை வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் இருவர் வெங்காய வெடியை வீசிச் சென்றனர். இதில் விடுதியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இதையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள், கண்ணாடி உடைந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தனர். பின்னர் வெங்காய வெடி வீசப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். 
இதுகுறித்து விடுதி உரிமையாளர் மகேஷ், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இணை ஆணையர் சக்திகணேசன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.