தமிழ்நாடு

திருச்சி: பணியில் அலட்சியம்; ஒரே காவல் நிலையத்தில் 16 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி: பணியில் அலட்சியம்; ஒரே காவல் நிலையத்தில் 16 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

JustinDurai
லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 16 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி நேற்றிரவு இரவு லால்குடி காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பதிவேடுகளை சரியாக பராமரிக்காமலும், பணியிடத்தில் காவலர்கள் இல்லாததாலும், பணியில் இருந்த காவலர்கள் அலட்சியமாக இருந்ததாலும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் 4 தலைமை காவலர்கள், 3 பெண் காவலர்கள் உட்பட 16 பேரை திருச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடியாக உத்தரவிட்டார். அதற்கு பதிலாக 16 பேரை ஆயுதப்படையிலிருந்து லால்குடி காவல் நிலைய பணிக்காக அனுப்பி வைத்தார்.
ஒரே நாளில் ஒரே காவல் நிலையத்திலிருந்து 16 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.