தமிழ்நாடு

வீட்டுச் சுவரை இடித்த போது விபத்து: சிறுமி உயிரிழப்பு

வீட்டுச் சுவரை இடித்த போது விபத்து: சிறுமி உயிரிழப்பு

webteam

மாணப்பாறை அருகே வீட்டின் சுவரை இடிக்கும் போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கிய சிறுமி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள பின்னத்தூரில் வசித்து வருபவர் துரைசாமி. இவரது மகள் உமாமகேஸ்வரி 8ஆம் வகுப்பு படித்து வந்தார். துரைசாமி வசித்து வந்த மண் சுவரினால் ஆன கீற்று வீட்டை இடித்துவிட்டு, பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார். இதற்காக வீட்டின் சுவர்களை அவர் இடித்துக் கொண்டிருந்தார். 

வீட்டின் முன்புறம் இருந்த மண் சுவரை அவர் இடித்தபோது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மகள் உமாமகேஸ்வரி மீது எதிர்பாராத விதமாக சுவர் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர், காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.