தமிழ்நாடு

அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை-அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

kaleelrahman

அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக தலைமை இல்லை என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டியளித்துள்ளார்.


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு மற்றும் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 3100 பெண்களுக்கு 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் திருமண நிதி உதவியையும், 1984 பயனாளிகளுக்கு ரூ.10,93,50,345 மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவையும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசும்போது....

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். அ.ம.மு.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைமைதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க தலைமை அ.ம.மு.கவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் இல்லை. சசிகலாவை நிச்சயம் நான் சந்திக்க வாய்ப்பில்லை என்றார்.