தமிழ்நாடு

திருச்சி: பள்ளபட்டி ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி: பள்ளபட்டி ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

kaleelrahman

திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த பள்ளப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில், திருச்சி மதுரை புதுக்கோட்டை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றனர்.

இந்நிலையில் விறு விறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 பேர் காயமடைந்தனர். இதில், 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டியைச் சேர்ந்த சசி கில்பர்ட் (21) என்ற மாடுபிடி வீரரின் நெஞ்சில் மாடு உதைத்ததில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதைத் தொடர்ந்து இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.