தமிழ்நாடு

திருச்சி: பேருந்தின் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருச்சி: பேருந்தின் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

சமயபுரம் அருகே தனியார் பேருந்தின் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் ஏன்பவரின் மகன் நந்தகுமார் (19). இவர், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வந்தார்.

இந்நிலையில் இன்று காலை நந்தகுமார், கல்லூரிக்கு செல்வதற்காக சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி முன்பக்க படியில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து டோல்கேட் பிரிவு சாலையில் சென்றபோது படியில் தொங்கியபடி சென்ற நந்தகுமார், கை நழுவி கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் பின்சக்கரம் மாணவன் உடல் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.