செய்தியாளர்: S. சந்திரன்
திருச்சி மாவட்டம், முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முசிறி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக நீட் தேர்விற்கான இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது, இன்று பள்ளி அருகே உள்ள மரங்களில் இருந்த கதண்டு கூடு கலைந்து பயிற்சிக்கு வந்த மாணவிகளை கடித்துள்ளது.
இதில், காயமடைந்த மாணவிகள் சஞ்சனா, அட்சயா, கவிக்குயில், சந்தோஷினி, வைஷ்ணவி, தேவி ஆகிய 6 பேரை கதண்டு கடித்ததால் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களிடம் முசிறி போலீசார் விசாரணை, பள்ளி பகுதியில் மாணவிகளை கதண்டு கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,