குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ வீரர்கள் பங்கேற்ற மலையேற்ற போட்டி நடைபெற்றது. அதற்காக மலை போன்ற அமைப்பை செயற்கையாக ராணுவ வீரர்கள் வடிவமைத்திருந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ராணுவ வீரர்கள் பங்கேற்ற மலையேற்ற போட்டியில் பங்கேற்பதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராணுவ வீரர்கள் வெலிங்டன் முகாமிற்கு வந்திருந்தனர். வீரர்களின் உடல் வலிமை, மன வலிமை, விரைவாக செயல்படுதல் போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு குழுவிலும் 6 வீரர்கள் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற வீரர்களுக்கு இந்திய ராணுவ தலைமை பயிற்சி அதிகாரி மேஜர் ஜெனரல் குர்பிரீத்சிங் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. செண்டை மேளம் வாசிப்பு, வாள் சண்டை, கத்தி சண்டை, வாள் வீச்சு, சுருள் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.