தமிழ்நாடு

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் மோதல்

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் மோதல்

webteam

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இடையே பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து 5 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஓய்வூதியம், நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி தொழிற்சங்கத்தினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதால் காவல்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் இடையே பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவலர்கள் தொழிலாளர்களை கைது செய்தனர்.  குறிப்பாக,விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.