தமிழ்நாடு

“நிவாரண பொருட்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை” - விஜயபாஸ்கர்

“நிவாரண பொருட்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை” - விஜயபாஸ்கர்

webteam

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்றால் லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

‘கஜா’ புயல் கடந்த 15ஆம் தேதி இரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,
 தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன.

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.

இதனிடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதாகவும் தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்றால் லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.