தமிழ்நாடு

தீபாவளிக்கு ஆவினிடமே இனிப்புகளை வாங்கும் போக்குவரத்துத் துறை : அமைச்சர் நாசர் தகவல்

Veeramani

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான தீபாவளி இனிப்புகள் ஆவின் நிறுவனத்திடமே ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இனிப்புகளை வாங்க டெண்டர் விடப்பட்ட நிலையில், டெண்டர் விதிமுறையில் 100 கோடி ரூபாய், விற்றுமுதல் செய்யும் நிறுவனங்களுக்கே டெண்டர் விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

100 கோடி ரூபாய் விற்றுமுதல் செய்யும் நிறுவனங்களிடம் டெண்டர் எடுக்க காரணம் என்ன? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். குறைந்த விலையில் தரமான இனிப்புகளை வழங்கும் நிறுவனத்திடமே ஆர்டர்களை கொடுப்போம் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் அரை கிலோ இனிப்புகளுக்கு ஆவினில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.