தென்காசி முகநூல்
தமிழ்நாடு

தென்காசி | வீட்டிலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருநங்கை.. நடந்த விபரீதம்!

அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

PT WEB

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, வீட்டிலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததால், திருநங்கை ஒருவர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

அரசர் குளத்தைச் சேர்ந்த சிவாஜிகணேசன் என்பவர், ஷைலு என பெயரை மாற்றிக் கொண்டு, மகாலட்சுமி என்ற திருநங்கையுடன் வசித்துள்ளார்.

ஷைலு, தனக்குத் தானே பாலின மாற்று அறுவை செய்து கொண்டதால், அதிக அளவு ரத்தம் வெளியேறியதாக, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தது உறுதியானது. இதுகுறித்து, கடையம் காவல்துறையினர் விசாரித்தனர். மகாலட்சுமி, மதுமிதா ஆகிய திருநங்கைகள், வீட்டிலேயே வைத்து ஷைலுவுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது அதிக அளவு ரத்தம் வெளியேறி உயிரிழந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.