தமிழ்நாடு

இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான திருநங்கை தற்கொலை முயற்சி

இளைஞர் உயிரிழப்புக்கு காரணமான திருநங்கை தற்கொலை முயற்சி

Rasus

வேலூர் ஆலப்புழா விரைவு ரயிலில் இருந்து இளைஞரை தள்ளிவிட்டு அவர் உயிரிழக்கக் காரணமான திருநங்கை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்போது மருத்துவமனையில் திருநங்கை ஸ்வேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை முதல் ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு பேரிடம் திருநங்கைகள் சிலர் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் திருநங்கைகளுக்கு பணம் கொடுக்கவில்லை. அப்போது பணம் தர மறுத்த இளைஞர் சத்ய நாராயணன் என்பவரை ரயிலில் இருந்து திருநங்கை ஒருவர் தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் இருந்து கீழே விழுந்த சத்ய நாராயணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். நண்பரை தள்ளிவிட்டதில் பதற்றமடைந்து அவரை காப்பாற்ற ரயிலிருந்து குதித்த சத்ய நாராயணனின் நண்பர் தாரம் வீரம் பாபுவும் பலத்த காயமடைந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பின் ரயிலில் இருந்து கீழே குதித்த திருநங்கைகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தப்பியோடிய திருநங்கைகளை ரயில்வே காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் சத்ய நாராயணன் உயிரிழப்புக்கு காரணமான திருநங்கை ஸ்வேதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.