தமிழ்நாடு

சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பை ஏற்றார் திருநங்கை பிரித்திகா

சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பை ஏற்றார் திருநங்கை பிரித்திகா

Rasus

நாட்டிலேயே முதன் முறையாக காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை பிரித்திகா யாசினி தருமபுரியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அவர், சென்னை வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி‌ பெற்றார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரித்திகா யாசினி உள்ளிட்டோருக்கு காவல் உதவி ஆய்வாளருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதன் பின்னர், தருமபுரி காவல் நிலையத்தில் அவர் காவல் உதவி ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றார்.