ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பீட்டாவிற்கு பாடைகட்டி திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு சுமார் 2000 கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளம் மூலமாக இணைந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைக்கு இவர்களுடன் வணிகர்கள், தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி பகுதியில் உள்ள திருநங்கைள் பழைய பஸ் நிலையம் அருகே இருந்து பீட்டாவிற்கு பாடை கட்டி ஊர்வலமாக கொண்டு வந்து பயணியர் விடுதி முன்பு பாடையை கீழே போட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.