தமிழ்நாடு

வெடித்துச் சிதறிய‌ டிரான்ஸ்பார்மர்: நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி

வெடித்துச் சிதறிய‌ டிரான்ஸ்பார்மர்: நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி

webteam

கோவையில் மின்மாற்றி வெடித்து சிதறியபோது அவ்வழியே சென்ற வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கோவை டாடாபாத் ஆறுமுக்கு பகுதியில் உள்ள மின்மாற்றி வெடித்துச் சிதறியது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி நூலிழையில் உயிர் தப்பினார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அவர்கள் வருவதற்குள் அங்கிருந்த மக்களே தீயணைப்பான் கருவியை கொண்டு சாலையில் பரவிய தீயை அணைத்தனர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தீ விபத்தால் மின்மாற்றி அருகே இருந்த இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்தது .

 நிகழ்விடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்மாற்றியை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.