பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
பொங்கல் பண்டிகை வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனடிப்படையில், ஜனவரி 12ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. தற்போது பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட இடங்களில் பலர் நேரில் வந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதில் தென் மாவட்ட ரயில்களில் பெரும்பாலான இடங்கள் வேகமாக நிரம்பியுள்ளன.
முன்பதிவுக்காக, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஜிஎஸ்டியால் டிக்கெட் விலையில் மாற்றமில்லை என பதாகையில் எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது. தற்போது ரயிலில் செல்லும் பயணிகளில் 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளது.