தமிழ்நாடு

ரயில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது

ரயில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது

webteam

வடமதுரை ரயில் நிலையத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சுற்றியுள்ள 25 கிராமங்களிலிருந்து நாள்தோறும் ஏராளமனோர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்தும் வகையில் நடைமேடை அமைப்பதாகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் 500க்கும் மேற்பட்டோர் வைகை விரைவு ரயிலை மறிக்க முயற்சித்தனர். 

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார், ரயிலை மறிக்க முயன்ற‌‌ மக்களை கயிறு கட்டி தடுத்தனர். இருப்பினும் பலர் சிகப்பு கொடி ஏந்தி வைகை ரயிலை நடுவழியில் மறித்தனர். அதனால் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் அரைமணிநேரம் வைகை விரைவு ரயில் தாமதமாகச் சென்றது. இந்நிலையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.