தமிழ்நாடு

சிறைப்பிடிக்கப்பட்ட பயணிகள் ரயில் மீட்பு

சிறைப்பிடிக்கப்பட்ட பயணிகள் ரயில் மீட்பு

webteam

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் செல்லூரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் மீட்டு கொண்டு செல்லப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் கடந்த 19 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் வைகை ஆற்று மேம்பாலத்தில் சென்ற ரயிலை சிறைபிடித்தனர். ர‌யிலை மீட்க காவல்துறையினர் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக ரயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான நிரந்தரச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ரயில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட ரயில் மற்றொரு எஞ்சின் மூலம் அருகில் உள்ள நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணிகளுக்கு பின் ‌ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.