சென்னை மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிய படி சென்ற 5 பேர் பரிதாபமாக பலியாயினார். இதற்கு காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த ரயில்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் வேலை நேரங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். வழக்கம் போல இன்றும் அப்படியே இருந்தது.
காரணம் என்ன?
ஆனால், கோடம்பாக்கம்- மாம்பலம் இடையே மின்சார ரயில் செல்லும் பாதையில் உயர் அழுத்த மின் கம்பி இன்று காலை அறுந்து விழுந்தது. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கை யிலேயே ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் கடற்கரையில் இருந்து திருமால்பூர் செல்லும் ரயில் இன்று காலை புறப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பயணி கள் தொங்கியபடி சென்றனர்.
பரங்கிமலை அருகே வந்தபோது, ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் ரயில் நிலைய கான்கிரீட் தடுப்பில் பயங்கரமாக மோதினர். இதில் தொங்கிக் கொண்டிருந்தவர்களில் ஏழு பேர் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் 4 பேர் பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்த னர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்கள் யார் என்று உடனடியாக தெரியவில் லை. அதில் ஒருவர் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கூடுதல் போலீஸ் ஆணையர் சாரங்கன் தலைமையில் வந்த போலீசார் விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டனர். ரயில்வே ஐஜி. வீரேந்திரகுமாரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற் கொண்டார்.
வேலைக்கு செல்லும் காலை நேரத்தில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.