தமிழ்நாடு

துருக்கியின் துயரச் சம்பவம்: மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்திய பள்ளிக் குழந்தைகள்!

webteam

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்காக பள்ளிக் குழந்தைகள் இரங்கல் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்தினர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஒரேநாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் அதிகமான கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை மொத்தம் 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாடுகளும் துருக்கி, சிரியாவில் மீட்பு பணி மேற்கொள்ள உதவிகள் செய்து வருகின்றனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாநகரில் 20 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், ஏரளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் துருக்கி சிரியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப அஞ்சலி செலுத்தினர்,

காந்திக்கு பிடித்த பாடலான ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலை பாடி கண்களை மூடி உயிர் இழந்தவர்களுக்காக தங்களது அஞ்சலியை செலுத்தினர். மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும், மக்கள் துயரத்தில் இருந்து மீளவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.