தமிழ்நாடு

மாடியில் இருந்து குதிக்கப் போவதாக டிராஃபிக் ராமசாமி மிரட்டல்

மாடியில் இருந்து குதிக்கப் போவதாக டிராஃபிக் ராமசாமி மிரட்டல்

webteam

விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என கூறி மாடியில் இருந்து குதிக்கப்போவதாக டிராபிக் ராமசாமி மிரட்டல் விடுத்தார்.

சென்னை பாரிமுனையில் உள்ள அவரது அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க வேண்டும்,  தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இல்லாவிட்டால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். அவரை சமாதனம் செய்ய அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை சமாதனப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். பிறகு ஒரு வழியாக அவரை காவல்துறையினர் கீழே இறக்கினர்.