சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர், டிராபிக் ராமசாமி நடத்திய போராட்டத்திற்குப் பிறகு அகற்றப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நிமிர்’. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே, நிமிர் திரைப்படத்தின் பேனர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேனாம்பேட்டை சிக்னல் அருகே ரசிகர்களால் வைக்கப்பட்டது.
இதனையடுத்து மக்களுக்கு இடையூறாக இருக்கும் ‘நிமிர்’ பட பேனரை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி போராட்டம் மேற்கொண்டார். டிராபிக் ராமசாயின் போராட்டத்திற்கு வெற்றியாக ‘நிமிர்’ பட பேனர் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது. இதனிடையே, பேனரை அகற்றும் வரை அந்த இடத்தை விட்டு போகமாட்டேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டதால்தான் பேனர் அகற்றப்பட்டதாக டிராபிக் ராமசாமி கூறினார்.