சென்னை எழும்பூரில் சாலையின் நடுவே ஏற்பட்ட சாக்கடை உடைப்பை அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரே இறங்கி சரி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூர் லேங்ஸ் கார்டன் சாலையில் சாக்கடை உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரி செய்வது தமது முதற் கடமை என்பதால் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பிரபு, தயக்கம் ஏதுமின்றி இரு தொழிலாளிகளுடன் இணைந்து தானே களத்தில் இறங்கி சாக்கடை உடைப்பை சரி செய்தார்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் போக்குவரத்து அங்கு சீரானது. போக்குவரத்து காவலர் பிரபுவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.