ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையில் பூசணிகாய், தேங்காய் உள்ளிட்டவற்றை உடைக்க வேண்டாம் என சென்னை போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையர் பெரியய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய அவர், ஆயுத பூஜை கொண்டாடும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேநேரம் சாலைகளில் பூசணிக்காய்களை உடைப்பதால் வாகனங்கள் வழுக்கிச் சென்று விபத்து நேரிடுகிறது என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.