தமிழ்நாடு

புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Rasus

புத்தாண்டை முன்னிட்டு சென்னை கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் வரும் 31-ம் தேதி இரவு விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை உட்புற சாலையில் அனைத்து வழிகளும் 31-ம் தேதி இரவு 8 மணி முதல் சாலைத் தடுப்புகள் கொண்டு அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகர் ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 6-வது அவென்யூவில் 31-ம் தேதி இரவு 8 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

பெசன்ட் நகர் 6-வது அவென்யூ இணைப்பு சாலைகளான 5-வது அவென்யூ, 3-வது, 4-வது பிரதான சாலைகள் மற்றும் 16வது குறுக்குத்தெரு ஆகிய பகுதிகள் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 7-வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் போக்குவரத்துக் காவல்துறை கூறியுள்ளது.