தமிழ்நாடு

காரில் வந்து டிராக்டர் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய இருவர்

காரில் வந்து டிராக்டர் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய இருவர்

webteam

சென்னை அருகே திருடப்பட்ட டிராக்டரை சிசிடிவி கேமராவின் மூலம் காவல்துறையினர் 24 மணி நேரத்தில் மீட்டனர்.

சென்னை திருவேற்காடு, நடேசன் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன் (49). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்துக்கொண்டு திருவேற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இவர் தனது டிராக்டரை  நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி விட்டு சென்றார். காலையில் பார்த்தபோது டிராக்டர் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து காவல்துறையினர் வாசுதேவன் புகார் அளித்தார். 

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இரவு நேரத்தில் காரில் வரும் இரண்டு, கள்ள சாவி மூலம் டிராக்டரை திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த காரின் நம்பரை வைத்து விசாரணை செய்த காவல்துறையினர், அதன்மூலம் திருவேற்காடு காமதேனு நகரைச் சேர்ந்த ஐயப்பன் (41) மற்றும் விக்னேஷ் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களை விசாரித்த போது, டிராக்டரை திருடியதை ஒப்புக்கொண்டனர். 

பின்னர் ஏரி அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் இரண்டையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் இதேபோன்று வேறு எங்கும் திருட்டில் ஈடுபட்டுள்ளனரா ? என்றும் விசாரித்து வருகின்றனர். சிசிடிவி கேமரா உதவியால் 24 மணி நேரத்தில் டிராக்டரை திருடிய நபர்களை காவல்துறை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.