பல நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த கொடைக்கானலில் மெல்ல பருவநிலை மாறத்துவங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், நண்பகலில் கரு மேகங்கள் சூழ்ந்துமலைப்பகுதியின் நாலாபுறமும் குளிர் நிலவியது. காற்று அதிகமாக இருந்ததால் குளிர் அதிகரித்து காணப்பட்டது. நண்பகல் கடந்ததும், குளுகுளு குளிர் வீசியது. இந்தச் சூழல் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பின்னர் அது லேசான சாரலாக துவங்கி, மழையாக விட்டுவிட்டு பெய்தது. மழை விட்ட பின்னர் பல நாட்களாக நிலவி வந்த உஷ்ணம் தணிந்தது. ஆகவே வார விடுமுறை நாட்களில் ரம்மியமான சூழல் காணப்பட்டது. அதனை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து ரசித்தனர்.