தமிழ்நாடு

தொடர் விடுமுறை எதிரொலி: ஒகேனக்கல்லில் குடும்பம் குடும்பமாக குவிந்த சுற்றுலா பயணிகள்!

webteam

விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகளால் சுற்றுலா தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டிருந்தது.

அதனை சீரமைப்பு செய்து, சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தற்போது அனுமதி வழங்கியது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி வழங்கிய நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை முடியும் நிலையில், விடுமுறை தினத்தை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளோடும் குடும்பத்தோடும் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனர்.

இதனால் இன்று காலை முதலே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக தங்கள் குடும்பமங்களுடன் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஆயுள் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்தும், பரிசலில் சென்று அருவிகளில் அழகை கண்டு ரசித்து வருகின்றனர். இதனால் அருவி மற்றும் பரிசல் துறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.