தமிழ்நாடு

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே அனுமதி

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே அனுமதி

kaleelrahman

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கொரோனா பரிசோதனை செய்தபிறகு கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை சீராக உள்ளது. இதையடுத்து கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய பூங்காக்களுக்கு செல்வதற்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு இல்லங்களில் உள்ள படகுகளில் சவாரி செய்வதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.