தமிழ்நாடு

குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை

குற்றாலத்தில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்குத் தடை

webteam

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை ,தென்காசி, சுற்றுப்புற பகுதிகளில் மாலை முதல் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கருப்பானதி, அடவி நயினார் கோவில் அணை, குண்டாறு அணை ஆகியன நிரம்பி உள்ள நிலையில் தற்போது அதிகமான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் தற்போது குற்றால அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிக அதிகமான தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது. இந்நிலையில், குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதையும் படிக்கலாமே: கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்