பழைய குற்றாலம் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

பழைய குற்றால அருவி.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

பழைய குற்றால அருவியில் குளிக்க 17 நாட்களுக்குப் பிறகு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

PT WEB

பழைய குற்றால அருவியில் குளிக்க 17 நாட்களுக்குப் பிறகு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பழைய குற்றாலம்

பழைய குற்றால அருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

பராமரிப்புப் பணிகளைச் செய்வது யார் என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு இடையே பிரச்னை நிலவி வந்த நிலையில், கடைசியில் வனத்துறையே அந்தப் பணிகளைச் செய்தது. பராமரிப்புப் பணிகள் 70 சதவிகிதம் மட்டுமே முடிந்திருந்தாலும், சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்கள் என்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.