தமிழ்நாடு

வார இறுதி நாட்களில் ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லத் தடை

வார இறுதி நாட்களில் ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்லத் தடை

PT WEB

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா வர ஆட்சியர் கார்மேகம் தடை விதித்துள்ளார்.

வார இறுதி நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரும் 9-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனக் கூறியுள்ள ஆட்சியர், தேவைப்பட்டால், தடை நீட்டிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறநாட்களில் ஏற்காடு வருபவர்கள், கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் எனவும், உள்ளூர்வாசிகள் தனிநபர் ஆவணங்களை காண்பித்து செல்லலாம் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கொங்கணாபுரம் வாரச்சந்தையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.